தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் சாம் ஆண்டன். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, டிரிகர் ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் அடுத்து அவர் சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த மைக்கேல் திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. அதையடுத்து தனுஷோடு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் ஆகிய படங்களில் அவர் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் கதாநாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார்.