Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் நித்தி அகர்வால்!

பிரபாஸின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் நித்தி அகர்வால்!

vinoth

, சனி, 20 ஏப்ரல் 2024 (08:01 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், அந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.

இந்நிலையில் ஹனு ராகவபுடி அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதுவரை மூன்று பாடல்கள் தயாராகிவுள்ளதாக ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஈஸ்வரன் மற்றும் கலகத்தலைவன் ஆகிய படங்களின் கதாநாயகி நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் பிரேக்கில் இருந்த நித்தி அகர்வால் மீண்டும் இந்த படத்தின் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூட்டோடு சூடாக பிரேமலு 2 ஆம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர்கள்!