நடிகர் சல்மான் கான் தனது சிறை அனுபவங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாக கூறிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் சல்மான் கான் இன்று பாலிவுட்டின் முன்னணி ஹீரோ. அவரை நம்பி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு அவர் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறைக்குள் இருந்த போது தனக்கு எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர் காலையில் தேநீர் குடிக்கும் கப்பைப் பயன்படுத்திதான் குளிக்க வேண்டும். அதை வைத்துதான் கழிவறைப் பயன்பாடுகளும். இது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் என்ன நடந்தாலும் நான் உடற்பயிற்சி செய்வதை மட்டும் கைவிடவில்லை எனக் கூறியுள்ளார். அவர் பேசும் அந்த பழைய வீடியோ இப்போதும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.