Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா ஆகணும்னு ஆசை.. ஆனா அது என்னால முடியாது! – ஓப்பனாக சொன்ன சல்மான்கான்!

அப்பா ஆகணும்னு ஆசை.. ஆனா அது என்னால முடியாது! – ஓப்பனாக சொன்ன சல்மான்கான்!
, புதன், 3 மே 2023 (09:36 IST)
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பல காதல் தோல்விகளுக்கு பெயர் போனவர். தன் காதல் தோல்விக்கு என்ன காரணம் என அவர் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் 90கள் முதல் டாப்பில் இருந்து வரும் கான் நடிகர்களில் ஒருவட் சல்மான் கான். சிக்ஸ் பேக் வைத்து இளம்பெண்களின் மனம் கவர்ந்த சல்மான் கான் இன்றும் உடலை கட்டு மாறாமல் வைத்திருக்கிறார். சமீபத்தில் ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்து வெளியான படம் ஹிட் அடித்தது.

தற்போது 57 வயதாகும் சல்மான்கான் பல பாலிவுட் நடிகைகளுடன் காதலில் இருந்தாலும் பின்னர் காதல் தோல்வி அடைந்தது. ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகைகளுடன் சல்மான் கான் காதலில் இருந்தார்.

தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசிய சல்மான்கான் “என்னுடைய முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். என்னுடைய முதல் காதலி என்னை பிரிந்தபோது அவர் மேல்தான் தவறு என்று நினைத்தேன். ஆனால் என்னுடன் காதலில் இருந்த அனைவரும் என்னை விட்டு விலகியபோதுதான் தவறு என் மேல் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு தந்தையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் திருமணம் ஆகாமல் தந்தை ஆவதை நமது சட்டம் ஏற்காது” என்று கூறியுள்ளார்.

காலம் கடந்த பின் சல்மான் கானுக்கு திருமணம், குழந்தைகள், குடும்பம் மீது ஆசை வந்துள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அவர் தனக்கான சரியான காதலை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைமாறும் வாடிவாசல்… முன்னணி ஓடிடி நிறுவனம் முதலீடு!