Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சல்மான் கான் பயப்பட வேண்டாம்… கொலை மிரட்டல் குறித்து கங்கனா ரனாவத் கருத்து!

Advertiesment
Kisi Ka Kisi Ki Bhai Jaan
, செவ்வாய், 2 மே 2023 (08:10 IST)
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா கிசி கி பாய்  ஜான் படத்தில் நடித்து அதை ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு  நபர், தன்னை ராக்கி பாய் என்று அறிமுகம் செய்துகொண்டு, தான் ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடிகர் சல்மான்கான் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள கங்கனா ரனாவத் “சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதால் அவர் எதற்கும் பயப்பட வேண்டாம்.  இன்று நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. நாம் எதற்கும் கவலைப்பட தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்… எந்த படத்தில் தெரியுமா?