Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

vinoth
வெள்ளி, 28 மார்ச் 2025 (11:40 IST)
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸாகி கவனம் ஈர்த்தன. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவான சர்கார் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. நேற்று வரை சுமார் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முன்பதிவு அடுத்தடுத்து வரும் நாட்களில் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படம் படுதோல்வி… இத்தனை கோடி நஷ்டம் வருமா?

50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய ‘தலைவன் தலைவி’!

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

அடுத்த கட்டுரையில்
Show comments