Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!

J.Durai
திங்கள், 22 ஜூலை 2024 (19:58 IST)
காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 
 
ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், தனக்கான சிறப்பான நாளை ஓர் முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் செலவிட்டார். 
 
அவர் சில சுவையான உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். பின்னர், அவர் வயதானவர்களுடன் சில விளையாட்டுகளை விளையாடி,  ஆடிப்பாடி மகிழ்ந்து இதயத்தை வருடும் தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
 
இந்த சிறப்பான நிகழ்வை தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார்.
 
நெட்டிசன்கள் 
தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஆதரவையும் சாக்ஷிக்கு அளித்தனர்.
 
சாக்ஷி அகர்வால், மலையாளத்தில் தான் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பையும், கன்னடம் மற்றும் தமிழில் இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments