Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' மலையாளம் சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி உள்ளது!

J.Durai
திங்கள், 22 ஜூலை 2024 (19:56 IST)
பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,சரவெடி காமெடியுடனும் சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில்,சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
 
MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்  நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
 
நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ்  நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தை தரும் சீரிஸாக உருவாகியுள்ளது
 
இந்த சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்