பெருந்தலைவர் காமராஜரின் 122 -வது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியாகுமரி மணிமண்டபத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர்கள் மாலை அணிவித்து அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும்,பல்வேறு அமைப்புகள் சார்பிலும், காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது.....
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அவர் தெரிந்தே தான் சொல்கிறாரா.? தெரியாமல் சொல்கிறாரா.? என்பதை அவர் தான் விளக்கவேண்டும்.
தமிழக காவல்துறை விசாரணை நிலையில் சரியாகத்தான் சொல்கிறது. எதிர்கட்சிகளின் கருத்துக்களையும் மதிக்க கூடியவர் நம்முடைய முதல்வர்.
கடந்த கால ஆட்சியில் துப்பாக்கி சூட்டிற்கு அன்றைய முதல்வர் பத்திரிகை நண்பர்களிடம் சொன்ன பதில் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
தமிழக மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் நடைபெற்ற 11-தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்று கூறினார்