இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சயிஃப் அலிகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் மற்றும் நடிகை ஷர்மிளா தாகூரின் மகன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
பரம்பரா படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரேஸ், ஏஜெண்ட் வினோத் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை கரீனா கபூரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சயிஃப் அலிகானின் முதல் மனைவியின் மகள் சாரா அலிக்கானும் இந்தியில் இளம் நடிகையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சயிஃப் அலிகான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர் ஒருவர் சயிஃப் அலிக்கானை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சயிஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அதில் ஒரு காயம் முதுகுத்தண்டுக்கு அருகே மிக ஆழமாக இருந்துள்ளது.
அதனால் அவருக்கு உடனடியாக நரம்பியல் மருத்துவர்கள் மூலமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. அதனால் அவர் இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார். இந்நிலையில் கையின் மணிக்கட்டு அருகே அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.