கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் தெறி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் இந்த படத்தை அட்லி பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார்.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் சல்மான் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷ்ராஃப் வில்லனாக நடிக்க தமன் இசையமைத்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களயும் வசூலையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்துகொண்ட நிலையில் அவரை புகைப்படம் எடுத்த ஃபோட்டோகிராஃபர்கள் தோசா தோசா என சொல்லி கேலி செய்தனர். அதற்கு கீர்த்தி “நான் கீர்த்தி தோசா இல்லை.. கீர்த்தி சுரேஷ்… எனக்கு தோசா ரொம்ப பிடிக்கும்” எனக் கூறியுள்ளார். தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்யும் இந்த வார்த்தைக்கு கடுமையாக எதிர்வினையாற்றாமல் கீர்த்தி சுரேஷ் சென்றது தென்னிந்திய ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.