Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15000 கோடி ரூபாய் பரம்பரை சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான்..!

Advertiesment
15000 கோடி ரூபாய்  பரம்பரை சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான்..!

vinoth

, வியாழன், 23 ஜனவரி 2025 (09:08 IST)
இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சயிஃப் அலிகான், முன்னாள் கிரிக்கெட் வீரர்  மன்சூர் அலிகான் மற்றும் நடிகை ஷர்மிளா தாகூரின் மகன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சயிஃப் அலிகான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்  புகுந்த மர்ம நபர் ஒருவர் சயிஃப் அலிக்கானை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சயிஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சைஃப் அலிகான் குடும்பத்துக்கு சொந்தமான 15000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மத்திய பிரதேச அரசு அரசுடைமையாக்க உள்ளது. சைஃப் அலிகானின் போபாலின் நவாப் வம்சத்தைச் சேர்ந்தவர். அவரது மூதாதையர்கள் சுதந்திரத்தின் போது பாகிஸ்தானுக்கு சென்று இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர். அவரது குடும்பத்துக்கு இருந்த சொத்துகள் 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எனிமிஸ் ஆக்ட் சட்டத்தின் படி அரசுடைமையாக்கப்பட வேண்டும் என வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்போது அந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் விருது பெற்ற இனாரித்துவைக் கவர்ந்த ‘மகாராஜா’ திரைப்படம்.. இயக்குனர் பெருமிதம்!