Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“பணம் செல்வுபண்ணி எனக்கெதிரா வதந்திய பரப்புறாங்க..” சாய் பல்லவி கோபம்!

Advertiesment
“பணம் செல்வுபண்ணி எனக்கெதிரா வதந்திய பரப்புறாங்க..” சாய் பல்லவி கோபம்!
, சனி, 23 செப்டம்பர் 2023 (07:45 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இப்போது அவர் இந்தியிலும் ஒரு படத்தில் அறிமுகமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாயபல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொல்லி, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அந்த புகைப்படம் சிவகார்த்திகேயன் 21 படத்தின் பூஜையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் அவரும் இருக்கும் போது எடுத்த புகைப்படம். அதை வெட்டி ஒட்டி சாய் பல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சிலர் பரப்பி வந்தனர்.
இந்நிலையில் இப்போது அந்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் சாய் பல்லவி. அதில் “என் சம்மந்தப்பட்ட வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் அதில் என் நண்பர்களும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளதால் பேசவேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளேன்.

நான் நடிக்கும் ஒரு படத்தின் பூஜை புகைப்படங்கள் உள்நோக்கத்தோடு திரித்து பரப்பப்படுகின்றன. அதற்கான பணம் கொடுத்து சிலர் இதை பரப்புகிறார்கள். எனக்கு ஏதேனும் நல்ல விஷயம் நடந்தால் அதை நானே அறிவிப்பேன். இதுபோன்ற வேலையற்றவர்களின் விஷமத்துக்குப் பதிலளிப்பது அயர்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பேரு மட்டும்தான் ஒன்னு… மத்தபடி எந்த சம்மந்தமும் இல்ல’ – சந்திரமுகி 2 பற்றி ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்!