தெலுங்கின் பிரபல நடிகரான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க்யூ மற்றும் கஸ்டடி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த வகையில் இப்போது அவர் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் லவ் ஸ்டோரிஸ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.