கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் தற்போது ராமாயணம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே நடிகை சாய் பல்லவி, விஜய் நடித்த 'வாரிசு' என்ற படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது கமல் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து வேறு சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது 'மாநாடு' நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.