சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

vinoth
வெள்ளி, 20 ஜூன் 2025 (11:17 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சாய் அப்யங்கர் அது குறித்து பேசியுள்ளார். அதில் “படத்தில் சூர்யா சாருக்கான மாஸ் ஆன பின்னணி இசை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே நான் சூர்யா சாரின் ரசிகன். என்னுடைய ஃபேன் பாய் சம்பவமாக அந்த இசை இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments