சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (10:20 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். இதுவரை இந்த படத்தின் ‘தலைப்பு’ அறிவிக்கப் படாமல் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் “சூர்யா 45 படத்தின் reveal டீசர் விரைவில் வெளியாகிறது” எனக் கூறியுள்ளார். இந்த படத்துக்கு ‘வேட்டைக் கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

மோகன்லால் வைத்துள்ள யானை தந்தம் லைசென்ஸ் செல்லாது! - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

ராயன் படத்தில் இதனால்தான் நடிக்கவில்லை… விஷ்ணு விஷால் சொன்ன தகவல்!

இனி பாருங்க என் ஆட்டத்த..! TTF வாசனின் அனல் பறக்கும் IPL பட ட்ரெய்லர்!

ரஜினி & கமல் இணையும் படம் பற்றி அப்டேட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments