Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிடிக்கலனா பாக்காதீங்க... ஜெய் பீம் குறித்து எஸ்.ஏ.சி!!

பிடிக்கலனா பாக்காதீங்க... ஜெய் பீம் குறித்து எஸ்.ஏ.சி!!
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:24 IST)
இயக்கநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஜெய்பீம் படம் குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.
 
அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர். 
 
இந்நிலையில் இயக்கநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஜெய்பீம் படம் குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு படைப்பாளி என்கிற முறையில் நானும் ஜெய்பீம் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 
 
படைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரத்துடன் ஜெய்பீம் படத்தை இயக்கியிருக்கிறார் ஞானவேல். அனைவரும் ஒரு படத்தை படமாக பார்க்க வேண்டும். உங்களுக்கு அந்த படம் பிடிக்கலையா அதை பார்க்காதீங்க. புடிச்சா பாருங்க, 10 தடவை பாருங்க. பிடிக்கலைனா ஒரு தடவ கூட பார்க்காதீங்க என எஸ்.ஏ.சி. ஜெய்பீம் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'புஷ்பா’ ரிலீஸ் உரிமையையும் பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்!