ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது. அடுத்து அவர் வில்லனாக நடித்துள்ள கேம்சேஞ்சர் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் அந்த படம் ரிலீஸானதும் அவர் நீண்ட நாட்களாக இயக்க ஆசைப்பட்ட கில்லர் படத்தைத் தொடங்கவுள்ளாராம். இந்த படம் நியூ படத்தின் இரண்டாம் பாகம் போல இருக்கும் என அவரே அறிவித்துள்ளார். கேம் சேஞ்சர் ரிலீஸான ஒரு வாரத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் தொடங்கும் என எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.