Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

Advertiesment
Dhanush and STR

Prasanth Karthick

, ஞாயிறு, 24 நவம்பர் 2024 (13:36 IST)

சமீபத்தில் இட்லி கடை திரைப்பட தயாரிப்பாளர் இல்ல விழாவில் நடிகர் தனுஷ் இடம்பெற்ற புகைப்படங்கள்தான் இந்த முறை கோலிவுட் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

 

 

என்னதான் சினிமா குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது நடிப்பு திறமையால் உயர்ந்து நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களோடு ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளவர் நடிகர் தனுஷ். தனுஷின் சினிமா வாழ்க்கை தொடங்கியபோது அவருக்கும், சிம்புவுக்கும் தான் மோதல் இருந்து வந்தது.

 

இடையே 3 திரைப்படம் வெளியான சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனுஷுடன் நல்ல நட்பு இருந்து வந்தது. சில காலம் கழித்து சில மனஸ்தாபங்களால் இருவரும் சினிமா உலகில் பிரிந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

 

இப்படி தனுஷ்க்கு முந்தைய காலங்களில் சில திரை நட்சத்திரங்களோடு சில உரசல்கள் இருந்தபோதிலும், அதையெல்லாம் மறந்து அனைவருடனும் அவர் சிரித்து பேசி மகிழ்ந்துள்ள சம்பவம்தான் தற்போது கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது. 

 

சமீபத்தில் தனுஷ் நடித்து, இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் வீட்டு நிகழ்ச்சியில் தனுஷ், நயன்தாரா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது சிம்புவும், தனுஷும் மிகவும் நட்பாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியோடும் தனுஷ் சிரித்து பேசியபடி இருந்தார். ஆனால் நயன்தாரா அருகே இருந்தபோதும் கூட அவருடன் தனுஷ் பேசவில்லை. இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரசிகர்கள் கடந்த கால கசப்புகள் மறந்து, நிகழ்கால நட்புகளாக சேர்வதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!