Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலிஸ் வேலைகளை தொடங்கும் ஆர் ஆர் ஆர் படக்குழு… தேதி இதுதானாம்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:16 IST)
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் இறுதியில் இருக்குமென சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் சில பல காரணங்களால் ரிலீஸில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் மறுதேதி அறிவிக்கவில்லை. இந்நிலையில் இனிமேல் 3 மாத தாமதத்துக்குப் பின்னர் ஏப்ரல் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்கள் துண்டுபோட்டு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் ஏப்ரல் இறுதியில் பாகுபலி 2 ஆம் பாகம் வெளியான நாளில் உலகம் முழுவதும் ஆர் ஆர் ஆர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments