Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஆர்.ஆர்.ஆர் ''படம் ஜப்பானில் இன்று ரிலீஸ்..வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:48 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாளை ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜாப்பனீஸ் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு நாளை முதல் ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி, ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜூனியர் என்டி.ஆர், ராம்சரண் ஆகியோர் படக்குழுவினர் ஒரு வீதியில் ஒன்றாக சென்ற வீடியோ வைரலான நிலையில், தற்போது அங்குள்ள திரையரங்கில்  நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்திருக்க ஆர் ஆர் ஆர் திரையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோவை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இது வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments