Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

விண்வெளி நிலையத்தில் இருந்து   நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்
, சனி, 15 அக்டோபர் 2022 (22:01 IST)
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்களுடன் சென்றது.

இந்த விண்வெளி மையத்தில், 4 வீரர்களும்  6 மாத காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.  இந்த நிலையில் ஆய்வுப் பணி முடிந்து 4 வீரர்கள் பயணித்த விண்கலம்  நேற்று  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்வெளி  மையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள கடலில் பாராசூட்டின் மூலம் இறங்கியது.

இந்த நிலையில் தற்போது விண்வெளி மையத்தில், 3 அமெரிக்க வீரர்களும், 3 ரஷியர்களும்,  1 ஜப்பானியர் என 7 பேர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்...