Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

vinoth

, வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:14 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் ஆர் ஆர் ஆர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்த கதைக்களத்தில் இரு வரலாற்று பாத்திரங்களை கற்பனையாக ஒன்றிணைத்து இந்த படத்தை ராஜமௌலி உருவாக்கி இருந்தார்.

இந்தபடம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை வென்று உலகளவில் புகழ்பெற்றது. இந்த படம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டவர்கள் படத்தைப் பாராட்டினர்.  ஸ்பீல்பெர்க் ராஜமௌலியின் அடுத்த படத்தை வழங்கவும் உள்ளார்.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் உருவானது எப்படி என்ற மேக்கிங் வீடியோ ‘RRR behind & Beyond’ என்ற வீடியோ தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல், ரஜினிக்குப் படம் பண்ணமாட்டேன்… சிவகுமாரின் கேள்விக்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!