Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனல் பறக்கும் ராஜமௌலியின் RRR பட மோஷன் போஸ்டர்!

Advertiesment
அனல் பறக்கும் ராஜமௌலியின் RRR பட மோஷன் போஸ்டர்!
, புதன், 25 மார்ச் 2020 (12:05 IST)
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

இந்நிலையில் கொரோனாவால் நாடே முடங்கியிருக்கும் இச்சமயத்தில் மக்களின் சோகமான மனநிலையை போக்க உதவியாக இருக்கும் என கருதி RRR படகுவினர் இன்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொர்க்கத்தின் நுழைவு வாயிலிலை நடிகர் ரஜினிக்கு டேக் செய்து காட்டிய மீரா மிதுன்!