நான் நேசிப்பவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம்... மாஸ்டர் நடிகை மாளவிகா மோகன்!

புதன், 25 மார்ச் 2020 (09:33 IST)
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே மக்களின் நலன் கருதி இந்திய அரசு மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பதுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறிவருகின்றனர். அந்தவகையில் தற்போது  விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த விழிப்புணர்வு செய்துள்ளார்.

அதவாது, என் பெற்றோர், என் சகோதரர், என் அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆரோக்கியம் தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. இது குறித்து அலட்சியமாக இருப்பது பெரும் தீங்கு விளைவிக்கும்.  எனவே "என் தாய் தந்தையருக்காக நான் வீட்டில் இருக்கிறேன்"  என்ற பதாகையை ஏந்தியபடி . #stayhome #staysafe #breakthechain #istayhomefor உள்ளிட்ட ஹேஸ்டேக்களை பயன்படுத்தி இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

The health of my parents, my brother, my loved and close ones is my most important priority in life. Us being irresponsible and negligent puts them in danger of contracting harmful virusus. #stayhome #staysafe #breakthechain #istayhomefor pic.twitter.com/vspHY7oEQE

— malavika mohanan (@MalavikaM_) March 24, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரானாவிலும் பிறந்தநாள் கொண்டாடி கணவருடன் குதூகலம் போட்ட நடிகை!