ட்யூட் படத்தின் ரிலீஸில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் விலகல்… கைகொடுக்கும் ஏஜிஎஸ்!

vinoth
திங்கள், 6 அக்டோபர் 2025 (10:30 IST)
லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ப்ரதீப் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘ட்யூட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்யூட் படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி ரிலீஸ் வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தைத் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றினார். ஆனால் தற்போது அவர் விலகிக் கொள்ள அவருக்குப் பதிலாக ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ படத்தை தமிழகத்தில் விநியோகிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ட்யூட் படத்தின் ரிலீஸில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் விலகல்… கைகொடுக்கும் ஏஜிஎஸ்!

ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறினார் சமந்தா!

கடலில் கவிழ்ந்த படகு.. சூரியின் ‘மண்டாடி’ படக்குழுவுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம்!

‘பாகுபலி The epic’ ரி ரிலீஸில் காத்திருக்கும் மூன்றாம் பாக சர்ப்ரைஸ்!

30 வயது ரஜினிகாந்தை மனதில் வைத்து ‘ட்யூட்’ கதையை எழுதினேன்… இயக்குனர் கீர்த்தீஸ்வரன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments