Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் நயன்தாரா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்… வைரல்…

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (22:19 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவரும் இவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்டது. அப்போது இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி –சேலையில் அணிந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அத்துடன் இப்படமும் சர்வதேச விருதினை வென்றது.

தற்போது, நயன்தாரா  தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ச் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க விஜய்சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று ஈஸ்டர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினார். பின்னர், அவருடன் ரொமான்ஸாக செய்து பார்ப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments