Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதிராஜா மற்றும் வசந்த்ரவி நடித்துள்ள ‘ராக்கி’ – மிரட்டும் டிரைலர் !

Advertiesment
பாரதிராஜா மற்றும் வசந்த்ரவி நடித்துள்ள ‘ராக்கி’ – மிரட்டும் டிரைலர் !
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (13:07 IST)
தரமணி படத்தின் நாயகன் வசந்த்ரவி நடிக்கும் ராக்கி படத்தின் டிரைலர் வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் நடித்து வெளியாகி கவனத்தைப் பெற்ற படம் தரமணி. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் வித்யாசமான டிரைலர் காலை 11.30 மணிக்கு வெளியாகி சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த படம் தீபாவளிக்குப் பின்னர் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=pH1xTAnFE9M&feature=share&fbclid=IwAR0xBOx74_KaBIpiIR016iVZz-9pXXzf4Xr5Ohx7bVmUsgiru3qwA1fVLSI

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷெரினுக்கு ஒரு முக்கிய வேலை கொடுத்த கமல்!