Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியில் ரீமேக் ஆகும் ராக்கி… அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

இந்தியில் ரீமேக் ஆகும் ராக்கி… அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
, புதன், 30 மார்ச் 2022 (07:45 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா  நடிப்பில் உருவான திரைப்படம் ராக்கி.

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ராக்கி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவான இந்த படம் பல் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. பரவலான கவனத்தையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இதையடுத்து இப்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இந்தி ரீமேக் உரிமையை வாக்கோ பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படமான சாணிக்காயிதம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 ஆண்டு இடைவெளிக்குப் பின் கார்த்தியின் சர்தாரில் ரி எண்ட்ரி… யார் அந்த நடிகை?