Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

என்கிட்ட ‘ஐஅம் பேக்’ன்னு சொன்னாரே? தவசி மறைவு குறித்து ரோபோ சங்கர்!

Advertiesment
‘ஐஅம் பேக்
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:57 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் தவசி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினரிடம் போதிய பணம் இல்லாதது குறித்த தகவல் அறிந்ததும் ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்கள் அவருடைய சிகிச்சைக்காக உதவி செய்தனர். 
 
இந்த நிலையில் உயர்தர சிகிச்சை காரணமாக நடிகர் தவசி குணமடைந்து வீடு திரும்புவார் என்று அனைத்து திரையுலகினரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரையும் ஏமாற்றி விட்டு நேற்று இரவு நடிகர் தவசி காலமானார் இந்த செய்தியைக் கேட்டதும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
நடிகர் தவசி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு கொண்டிருப்பதை அறிந்ததும் நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் அளித்து நிதி உதவி கொடுத்ததோடு ‘ஐஅம் பேக்’ன்னு என்று சொல்லுங்கள் என்று அவரிடம் கூறினார் தவசியும் தன்னம்பிக்கையோடு ‘ஐஅம் பேக்’என்று கூறினார். 
 
தவசி மறைவு குறித்து ரோபோ சங்கர் கூறியபோது, ‘தவசி அண்ணனை கடைசியாக பார்த்தது நான்தான் என்றும் எல்லா கலைஞர்களும் நிறைய உதவி செய்துள்ளார்கள் என்றும் அவர் இறந்த செய்தியைக் கேட்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் கேட்கும் கூறினார். என்கிட்ட ‘ஐஅம் பேக்’ன்னு சொன்னார் என்று நினைத்து நினைத்து நான் தான் வருத்தப்படுவதாகவும், தயவு செய்து அவரது குடும்பத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்றும் ரோபோ சங்கர் கூறினார். மேலும் இந்த நோயை ஆரம்பத்திலேயே அவர் கவனித்து இருந்தால் கண்டிப்பாக அவர் குணமாகி இருப்பார் என்று கூறிய ரோபோ சங்கர் தவசியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயலின்போது டைட்டிலை அறிவிக்கும் ‘புரட்சிப்புயல்’ நடிகர்!