இருக்கிற இரண்டு டஜன் விநியோகஸ்தர்களே லாபம் இல்லை என்று தலையில் துண்டுடன் அலைகிறார்கள். ஆர்கே என்னடாவென்றால் ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கியிருக்கிறார்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே தயாரித்து நடித்திருக்கும் படம், வைகை எக்ஸ்பிரஸ். படம் தயாராகி பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், ஹிட் பாக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் வெளியிடுகிறார்.
அது என்ன ஹிட் பாக்ஸ். எல்லா படத்தையும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆக்குவது தான் ஹிட் பாக்ஸ். இதில் ஆயிரம் விநியோகஸ்தர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் தங்களது பகுதியில் படம் ஓடுவதை கண்காணிப்பதுடன், படத்தை பிரமோட் செய்வார்கள். அந்தந்த ஏரியாக்காரர்கள் என்பதால் கேபிளில் படம் போட்டாலோ திருட்டு டிவிடி விற்றாலோ உடனடியாக கண்டுபிடித்து தடுத்து விடுவார்கள்.
மேலும், டிக்கெட் கட்டணத்தையும் பாதியாக குறைக்கப் போகிறார்களாம். 3 டிக்கெட் வாங்கினால் 2 டிக்கெட்கள் இலவசம்.
இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் சலுகைகளால் படத்துக்கு கூட்டம் வருமா லாபம் கிடைக்குமா என தெரியாது. ஆனால், ஒழுங்காக ஒரு படம் செய்தால் நிச்சயம் தியேட்டருக்கு ஜனம் வரும், லாபமும் கிடைக்கும்.