Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

vinoth
வியாழன், 6 மார்ச் 2025 (15:15 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

ஆனால் கடந்த ஞாயிறன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்தும் ஒன்றும் இரண்டுமாக ஓடி சேர்த்ததுதான்.

இதைப் பற்றி பேசியுள்ள ரிக்கி பாண்டிங் “இப்போதுள்ள வீரர்களுக்கு 10 சிங்கிள்ஸ் எடுக்கக் கூட பொறுமை இல்லை. அதற்குள் பவுண்டரிகள் அடிக்க நினைத்து அவுட் ஆகிறார்கள். ஆனால் கோலி கடைசி வரை சிங்கிள்ஸ் எடுத்தே அணிக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதனால் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments