கொரோனா அறிகுறியோடு வருபவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனையில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கு கட்டாயம் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.