Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

Advertiesment
வேலு பிரபாகரன்

Siva

, வியாழன், 17 ஜூலை 2025 (15:52 IST)
பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் இன்று காலமானார். இதனை அடுத்து, திரையுலக பிரபலங்கள் அவருக்குச் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் 'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'உத்தமராசா', 'அசுரன்' உள்படப் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
 
1989 ஆம் ஆண்டு அவர் 'நாளைய மனிதன்' என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், அதனை அடுத்து 'அதிசய மனிதன்',  'அசுரன்', 'ராஜாளி' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் வெளியான 'கடவுள்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் 'கஜானா' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில், இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12:20 மணிக்குக் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!