Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல வில்லன் நடிகர்

Advertiesment
தனது புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல வில்லன் நடிகர்
, செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:18 IST)
தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியிருப்பவர் ஆர்.கே.சுரேஷ். ''சலீம்'', ''தர்மதுரை'' ஆகிய படங்களைத் தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து ''தாரை தப்பட்டை'', ''மருது'' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது ''பில்லா பாண்டி'',  ''வேட்டை நாய்கள்'', ''தனி முகம்'' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எல்லோரும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிக்க ஆர்வமாக உள்ளனர். கமல், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் படத்திற்கு படம் வித்தியாசமாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து  வருகின்றார்.
webdunia
அதோடு அடுத்து shikkari shambhu என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும்  ஆச்சரியப்படுத்தியுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவராக இதில் நடிக்கவிருக்கின்றாராம், அந்த கேரக்டரின் புகைப்படத்தை இவரே தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தாடி மற்றும் மீசையுடன் இருப்பதுபோல் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசானில் ரஜினியின் '2.0': கோடிக்கணக்கில் கைமாறிய பணம்