Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தி பிறந்த நாளில் விஜய்யின் 'சர்கார்' இசை! ஏன் தெரியுமா?

Advertiesment
காந்தி பிறந்த நாளில் விஜய்யின் 'சர்கார்'  இசை! ஏன் தெரியுமா?
, சனி, 25 ஆகஸ்ட் 2018 (12:35 IST)
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் சர்கார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி  விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  இதன் ஃபர்ஸ் லூக் போஸ்டரானது கடந்த ஜீன் 21-ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இதனால் படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் சர்கார் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருப்பதாக சன் பிக்ச்ர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கதில் அறிவித்துள்ளது.

webdunia

சமூக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்ட விஜய்,  நடித்துள்ள இந்த சர்கார் படம், அரசியல் தொடர்புடையது என கூறப்படுகிறது. எனவே தான் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை படக்குழு தேர்ந்தெடுத்து இருக்கலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் பாணியில் கேரளாவுக்கு உதவிய பில்கேட்ஸ்!