Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேவலமா அசிங்கப்படுத்திட்டாங்க சார்; குமுறும் பார்த்திபன்

கேவலமா அசிங்கப்படுத்திட்டாங்க சார்; குமுறும் பார்த்திபன்
, சனி, 9 பிப்ரவரி 2019 (13:49 IST)
தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து பார்த்திபன் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இளையராஜா 75 நிகழ்ச்சியை மாபெறும் நிகழ்ச்சியாக வடிவமைக்க பார்த்திபம் பயங்கரமாக மெனக்கெட்டார் என்றே சொல்லலாம். ரஹ்மான் இளையராஜா 75க்கு வந்ததற்கு பார்த்திபன் தான் முக்கிய காரணம்.
 
அப்படியிருக்க பார்த்திபன் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்து அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இளையராஜா 75 நிகழ்ச்சியை இப்படி நடத்தலாம் அப்படி நடத்தலாம் என பல்வேறு ஐடியாக்களை விஷாலுக்கு கொடுத்தேன். இது விஷால் தரப்புக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக விஷாலின் நண்பர்களான ரமணாவிற்கும் நந்தாவிற்கும் நான் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது பிடிக்கவில்லை.
 
இதனால் நான் சொல்வதையே அவர்கள் கேட்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை என நினைத்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இதுகுறித்து விஷால் என்னிடம் இதுவரை விசாரிக்காதது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
 
விஷால் தலைமையில் நடந்த இளையராஜா 75வில் போதிய திட்டமிடல் இல்லை எனவும், அதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கெல்லாம் ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க பார்த்திபன் சார் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைவிடப்பட்ட வர்மா! மகனுக்காக புதிய இயக்குனரை சிபாரிசு செய்யும் விக்ரம்.!