அறிமுகமான முதல் படத்திலேயே நடிகர் விக்ரமின் மகன் துருவிற்கு ஏகபட்ட பிரச்சினை வருகிறது.
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் மொழி மாற்றம் செய்யாமலேயே பல மாநில ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கு படம் என்றாலே முரட்டுத்தனமான லாஜிக் இல்லாத கதை என்ற இலக்கணத்தை மாற்றி நவீன காலத்து முரட்டு தேவதாஸ் படமாக தோற்றமளித்தது.
காதல் , காமம் , அழுகை , கோபம் , பெண்கள் தொடர்பு , மது , சிக்ரெட் , என ஒரு மனிதனின் உணர்ச்சி குவியல்கள் அத்தனையும் எதார்த்தமான நடிப்பினால் உருவான இப்படம் மிகப்பெரும் போட்டிகளுக்கு இடையில் E4 எண்டெர்டைன்மெட் நிறுவனம் முதலில் முந்திக்கொண்டு தமிழ் ரீமேக்கை தயாரித்தது.
விசித்திர கதையம்சம்கொண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்க விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்ட நிலையில் , பாலா இயக்கிய இப்படம் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்காததால் வேறு நடிகர், இயக்குனருடன் படம் மீண்டும் துவங்கும் என அறிவித்தனர் . மேலும் பாலாவுக்கும் , தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுபாட்டால் ‘வர்மா’ கைவிடப்படிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமான மகன் நடித்த படம் வெளியிடாமல் கைவிடப்பட்ட சோகத்தில் இருந்த நடிகர் விக்ரம், இந்த படத்தை மீண்டும் இயக்க பிரபல இயக்குனர் கௌதம் மேனனை அணுகி வருகிறாராம் . கௌதம் மேனன் , வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை காதல் படங்களை எடுத்தவர்.
ஆதலால்,வர்மா படமும் அதே போன்ற கதை அம்சம் என்பதால் இப்படத்தை பாலாவை விட கௌதம் மேனன் நன்றாக எடுப்பார் என்று படக்குழு ஆணித்தனமாக நம்புகிறதாம். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் நடித்து வருவதால் மகனும் அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க கௌதம் மேனனை சிபாரிசு செய்கிறார் என்று கூறப்படுகிறது.