Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையான ‘மாமன்னன்’ இவர்தானா ? – உதயநிதிக்கு நன்றி சொன்ன அரசியல் பிரபலம்!

Advertiesment
உண்மையான ‘மாமன்னன்’ இவர்தானா ? –  உதயநிதிக்கு நன்றி சொன்ன அரசியல் பிரபலம்!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (12:35 IST)
மாரி செலவ்ராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் மாமன்னன். இடஒதுக்கீடு பற்றி பேசும் இப்படத்தில் தலித்களின் வலி, வேதனையை உள்வாங்கி நடித்திருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் இப்படத்தின் உண்மையான மாமன்னன் குறித்த உண்மை தகவல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
அதாவது உதயநிதியிடம், "படத்தில் சமூக நீதி இருந்தாலும் நிஜத்தில் வேங்கை வயல் சம்பவம் போல் நடக்கிறது என்று கேட்டதற்கு, "மக்கள்தான் மாறவேண்டும்" என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து மாரி செல்வராஜிடம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவி மாமன்னன் படம் எடுக்கப்பட்டதா? திரைப்படத்தில் வடிவேலு உடைய கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் வடிவேலு ஓத்து போகிறாதா? என்ற கேள்விக்கு,
 
"அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது மாரி செல்வராஜின் இந்த பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியிருப்பதாவது, "நேற்று முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு 'மாமன்னன்' படம் பற்றி பேசி வருகின்றனர். நான் 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். 
webdunia
 
எனது விசுவாசத்திற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்புகளை வழங்கினார். 'மாமன்னன்' படம் என் கதையின் சாயலில் இருக்கிறது என்றால் அதை ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். அதற்காக படத்தை எடுத்து அதில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.எனக் கூறியுள்ளார் தனபால்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த இடத்தில் ஷேவ் பண்ணிவிடுவது யார்? எல்லைமீறிய கேள்விக்கு எகத்தாளமா பதில் சொன்ன சனம் ஷெட்டி!