Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

Mahendran
திங்கள், 9 ஜூன் 2025 (11:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம், வெளியான போது மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
 
தற்போது தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் உள்ள காட்சிகள் இணைப்பு மற்றும் மீண்டும் புதிதாக எடிட் செய்த பிறகு, இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
மதங்களை முன்னெடுத்து விவாதங்கள் எழும் சூழலில், இப்படி ஒரு கதைக்களத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்ததை பாராட்டலாம் என்றும், வலிந்து திணிக்காத காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் முக்கிய கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில், இயக்குநர் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் என்றும், படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், திரையரங்கில் இந்த படம் வெளியான போது தேவையில்லாத பல காட்சிகள் வெட்டி வீசப்பட்டுள்ளன என்றும், முன்பை விட எடிட்டிங்கில் படத்தின் கதை கோர்வை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், புதிதாக இணைக்கப்பட்ட காட்சிகள் படத்திற்கு முதுகெலும்பாக உள்ளன என்றும் கூறப்படுகிறது.
 
கிரிக்கெட் சம்பந்தமான காட்சிகளில் மட்டும் பரபரப்பு, அழுத்தம் இல்லையென்றும், அதை சரிசெய்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
சிறப்பு தோற்றம் என்று கூறப்பட்டாலும், படம் முழுவதும் ரஜினியின் ஆதிக்கம் இருக்கிறது என்றும், விஷ்ணு விஷால், விக்ரம் ஐயா உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
சில குறைகள் இருந்தாலும், மத நல்லிணக்கம், ஒற்றுமையை பேசும் படம் என்பதால், குடும்பத்துடன் இந்த படத்தை தாராளமாகப் பார்க்கலாம் என்றும், இந்த படத்திற்கு புதிதாக விமர்சனம் சொல்லப்படுகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

கமல்ஹாசன் நிறுவனத்துக்குப் படம் இயக்குனர் அருண்குமார்… ஹீரோ யார்?

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments