Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாடி இல்லாம கேஜிஎஃப் ராக்கி பாய்… அடையாளமே தெரியலன்னு சொல்லும் ரசிகர்கள்!

தாடி இல்லாம கேஜிஎஃப் ராக்கி பாய்… அடையாளமே தெரியலன்னு சொல்லும் ரசிகர்கள்!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:18 IST)
கேஜிஎஃப் படங்களின் மூலம் பேன் இந்தியா ஹீரோவாகிவிட்டார் நடிகர் யாஷ். தற்போது கேஜிஎஃப் 2 படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் 134.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆம் பாகத்துக்காக கடந்த பல ஆண்டுகளாக நீண்ட முடி மற்றும் தாடி கெட்டப்பில் இருந்தார் யாஷ். இதையடுத்து இப்போது படம் வெளியாகிவிட்ட நிலையில் தனது தாடி மற்றும் முடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தாடி இல்லாமல் யாஷ் வேறு யாரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது படம் இல்ல பாடம்… கே ஜி எஃப் 2 படத்தைப் பாராட்டிய முன்னணி இயக்குனர்!