Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வியக்க வைக்கும் கே ஜி எப் 2 முதல் நாள் வசூல்…. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

வியக்க வைக்கும் கே ஜி எப் 2 முதல் நாள் வசூல்…. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:22 IST)
கேஜிஎப் 2 படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் 134.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூனு பேரும் வேற மாதிரி… மிரட்டலான விக்ரம் படத்தின் அடுத்த glimpse