Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயிலர் படத்தோடு இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர் டீசர்!

ஜெயிலர் படத்தோடு இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர் டீசர்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:48 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர்  ஜுலை 28 ஆம் தேதி வெளியானது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெயிலர் திரைப்படத்தோடு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியாரா அத்வானியின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!