Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஷ்மிகாவை சந்திக்க 900km பயணம் செய்து ஏமாந்துப்போன ரசிகன் - பின் நடிகை செய்த செயல்!

Advertiesment
ராஷ்மிகாவை சந்திக்க 900km பயணம் செய்து ஏமாந்துப்போன ரசிகன் - பின் நடிகை செய்த செயல்!
, திங்கள், 28 ஜூன் 2021 (12:53 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
 
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர் ரசிகரான ஆகாஷ் திரிபாதி அவரை சந்திப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஷ்மிகாவின் சொந்த ஊரான குடகு மாவட்டத்தை மாவட்டத்திற்கு  900km பயணம் செய்து சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரது வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளார். அந்த நேரம் ராஷ்மிகா மும்பையில் இருந்துள்ளார். 
 
இதுகுறித்த மிகுந்த வருத்தத்துடன் அதே நேரத்தில் மகிழ்ச்சியுடனும் ட்விட்டர் பதிவிட்ட ராஷ்மிகா " என்ன பார்க்கவேண்டும் என வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனது குறித்து வருந்துகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். என கேட்டுக்கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் பட பாடல்… ஆட்டம் போட ரெடியாகும் பூஜா ஹெக்டே!