Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் வாயை விட்டு மாட்டிய ராஷ்மிகா! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

மீண்டும் வாயை விட்டு மாட்டிய ராஷ்மிகா! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
, புதன், 28 டிசம்பர் 2022 (13:27 IST)
சமீபமாக ராஷ்மிகா பேசும் சில கருத்துகள் சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துள்ள புஷ்பா 2, வாரிசு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. சமீபமாக சில இந்தி படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு இந்தி திரைப்பட ப்ரொமோஷனில் கன்னட சினிமா குறித்து ராஷ்மிகா பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து கன்னட சினிமா தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தான் பேசியது தவறாக சித்தரிக்கப்படுவதாக ராஷ்மிகா கூறியிருந்தார்.

தற்போது ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படமான ‘மிஷன் மஞ்சு’ விரைவில் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, ‘தென்னிந்திய படங்களில் காதல் ரொமான்ஸ் பாடல் என்றாலே குத்து பாட்டி, ஐட்டம் சாங் போல இருக்கும். இந்த படத்தில் எனக்கு நல்ல ரொமான்ஸ் பாடல் அமைந்துள்ளது’ என பேசியுள்ளார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவை சிறுமைப்படுத்தி பேசி வருவதாக ராஷ்மிகா மீது தென்னிந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியில் பேசி டார்ச்சர்; விமான நிலைய அதிகாரிகள் மீது சித்தார்த் புகார்!