விஜய் சேதுபதி & ஜனநாதன் படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் !

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:24 IST)
விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் மேலும் ஒரு கதாநாயகியாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜனநாதன் இயக்கிய பேராண்மைப் படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இதையடுத்து தன்ஷிகா நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சகுனி வேலையை சிறப்பாக செய்யும் வனிதா - வீடியோ!