கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
இந்நிலையில் இயக்குனர் ரவீந்தர புள்ளே இயக்கும் மைசா எனும் பேன் இந்தியா படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. சிவப்பு நிற உடையில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு ராஷ்மிகா ஆக்ரோஷமாக காணப்படும் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படம் பற்றி பேசியுள்ள ரவீந்தர புள்ளே “கோண்ட் பழங்குடியினர் பற்றிய சுவாரஸ்யமான கதையாக மைசா உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான ஆக்ஷன் படம் இது” எனக் கூறியுள்ளார்.