Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆனந்த கண்ணீருடன் ரன்வீருக்கு முத்தம் கொடுத்த தீபிகா!

, புதன், 19 டிசம்பர் 2018 (14:47 IST)
பாலிவுட்டின் புதுமணத் தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படைப்புகளால் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் நிஜத்தில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கியக்காரணம் . 


 
திருமணத்திற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கணவன் மனைவியாக சேர்ந்து வரும் அந்த அழகை பார்க்க ரசிகர்கள் கூடுவதும், அன்றைய தலைப்புச்செய்திகளில் இடம்பெறுவதுமாக இருக்கிறார்கள் தீப் -ரன் . அப்படித்தான் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் ரன்வீர் சிங்கிற்கு 'பத்மாவத்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற ரன்வீர் தனது மனைவி தீபிகாவுக்கு நன்றி தெரிவித்த விதம் தான் தற்போதைய பாலிவுட் ஹாட் நியூஸ். 
 
மேடையில் தோன்றிய அவர், "அந்தப் படத்தில் (பத்மாவத்) எனது குயின் (தீபிகா) எனக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில், அவள் எனக்கே எனக்கானவள். லவ் யூ பேபி! கடந்த 6 வருடங்களில் என் வாழ்க்கையில் நான் அடைந்த உயரங்களுக்கு நீ மட்டுமே காரணம். என்னை ஃபோகஸ்டாக வைத்திருந்தது நீ தான். அனைத்திற்கும் நன்றி, லவ் யூ" என மிகவும் உணர்வுப்பூர்வமாக தெரிவிக்க, ஆனந்த கண்ணீரில் கண்கள் கலங்கிய தீபிகா தன் காதல் கணவரை தழுவியவாறு முத்தமிட்டது பார்வையாளர்களையும் எமோஷனலாக்கியிருக்கிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"தோனி"- க்கு சவால் விடும் "கனா" திரைவிமர்சனம்!