Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை தரம்தாழ்ந்து விமர்சித்த போஸ் வெங்கட்… முதல் ஆளாய் கண்டித்த நடிகர்!

vinoth
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (15:28 IST)
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று முன் தினம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் 48 நிமிடங்கள் உரையாற்றினார்.

வழக்கமாக தன்னுடைய மேடைப் பேச்சுகளில் மிகவும் தன்மையாக பேசும் விஜய், நேற்று அரசியல் மேடையில் ஆவேசமாக ஆர்ப்பரித்தார். தனது பேச்சில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  விஜய் தன்னுடைய பேச்சின் நடுவே பெயர் குறிப்பிடாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தாக்கிப் பேசினார்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் விஜய்யின் பேச்சுக்கு நக்கலாக அவரின் எக்ஸ் தளப் பக்கத்தில் “யப்பா… உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்” என எதிர்வினையாற்றி இருந்தார்.

போஸ் வெங்கட்டின் வார்த்தைப் பிரயோகம் பலரையும் முகம் சுழிக்க வைத்த நிலையில் நடிகர் ரமேஷ் திலக் அவரைக் கண்டிக்கும் விதமாக “தப்புண்ணா நீங்க இப்படி சொல்லக் கூடாதுண்ணா” எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரமேஷ் திலக்கின் பதிவு கவனம் பெற்று பலரும் அவர் சொல்லி இருப்பது சரிதான் என்று கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments